மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோஷூட் எடுக்க 5000 கட்டணம் நிர்ணயம்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதிகள் போட்டோஷூட் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதிகள் போட்டோஷூட் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மதுரை ரயில் நிலைய மேலாளர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி ரயில் நிலையத்தில் போட்டோஷூட் நடத்த ரூ.5,000 செலுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள கூடுதலாக ரூ.1,500 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற ரயில் நிலையங்களுக்கு 3000 கட்டணம் நிர்ணயம் செய்து மதுரை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது. நினைவுகளை நினைவூட்டும் மிகப்பெரிய பொக்கிஷங்கள் புகைப்படங்கள் என்பது நாம் அறிந்த உண்மையே. குறிப்பாக திருமணத்தின் போது வித, விதமான புகைப்படங்களை எடுக்க அனைவரும் ஆசைப்படுகின்றனர். 1998-களில் மெல்ல நம்மை ஆட்கொண்ட டிஜிட்டல் புரட்சி, திருமணப் புகைப்படங்களையும் விட்டு வைக்கவில்லை.

முந்தைய கால திருமணங்களில் புகைப்படங்களே இருக்காது. ஆனால், 1990-களில் நடந்த பெரும்பாலான திருமணங்களில் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். இயற்கை காட்சிகள் அருகே மணமக்கள் நிற்பது, கைகளை பிடித்துக் கொண்டு மணமக்கள் நிற்பது, மணமகனை பார்த்து மணமகள் ரசிப்பது, மணமகளின் தோள்பட்டையை பிடித்துக் கொண்டு மணமகன் நிற்பது என அடுத்தடுத்த ஆண்டுகளில் திருமணப் புகைப்படங்கள் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. (Pre Wedding Photography), (post Wedding Photography) என பெயர் வைத்து திருமணத்திற்கு முன்பே இப்போதெல்லாம் போட்டோ எடுக்கக் தொடங்கி விட்டனர். இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதிகள் போட்டோஷூட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோஷூட் எடுக்க 5000 கட்டணம் நிர்ணயம்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: