கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்திலிருந்து தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்திலிருந்து, தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும், அரசு பேருந்துகளை போக்குவரத்து நெரிசலின்றி மாற்று வழிபாதையில் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்வது தொடர்பாகவும் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, மற்றும் வனத்துறையுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இன்று (9.6.2023) சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்திலிருந்து, தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும், அரசு பேருந்துகளை போக்குவரத்து நெரிசலின்றி மாற்று வழிபாதையில் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்வது தொடர்பாகவும் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, மற்றும் வனத்துறையுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய புறநகர் முனையத்திலிருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன. மேலும் கிளாம்பாக்கம் புதிய புறநகர் முனையத்திலிருந்து சென்னை மாநகர பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை – போலீஸ் அகாடெமி சாலை – நல்லம்பாக்கம் சாலை – ஊனமாஞ்சேரி – ஜி.எஸ்.டி சாலை ஊரபாக்கம் வழியாகவும் மற்றும் கூடுவாஞ்சேரி – மாடம்பாக்கம் சாலை – ஆதனுர் நெடுஞ்சாலை முதல் மாடம்பாக்கம் சாலை – யூனியன் சாலை – வண்டலுர் – வாலாஜாபாத் சாலை வழியாகவும் பேருந்துகள் செல்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அ.அமல்ராஜ், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, தாம்பரம் மாநகர காவல் இணை ஆணையாளர்(சட்டம் மற்றும் ஒழுங்கு) பா.மூர்த்தி, போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்கள், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்திலிருந்து தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Related Stories: