அக்‌ஷய் குமாரால் என் உயிருக்கு ஆபத்து: நடிகர் கேஆர்கே பரபரப்பு புகார்

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான், மற்றொரு பாலிவுட் நடிகரான கமால் ஆர் கான் (கேஆர்கே) சர்ச்சைக்குரிய கருத்து கூறியதற்காக கடந்த 2021ல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கேஆர்கே-வை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்றிரவு கேஆர்கே வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பாலிவுட் நடிகர்களில் அக்‌ஷய்குமாரைத் தவிர மற்ற அனைவருடனும் எனக்கு நல்ல உறவு இருக்கிறது.

என்னை போலீஸ் ஸ்டேஷன் அல்லது ஜெயிலில் கொல்ல திட்டமிட்டனர். அதற்காக சிறையில் கூலிப்படை நியமித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்தது எனது அதிர்ஷ்டம். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அக்‌ஷய் குமாரே முழு பொறுப்பு’ என்று கூறியுள்ளார்.

The post அக்‌ஷய் குமாரால் என் உயிருக்கு ஆபத்து: நடிகர் கேஆர்கே பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: