தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரின் நினைவு தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் மரியாதை

ஊட்டி : ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஊட்டி நகர மக்களின் காய்கறி தேவைக்காக கடந்த 1840ம் ஆண்டு காய்கறி தோட்டம் உருவாக்கப்பட்டது. அதன்பின் இத்தோட்டத்தை பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தொட்டபெட்டா உள்ளிட்ட சில இடங்களில் சின்கோனா பிளாண்டேசன் இருந்தது. இந்த சின்கோனா நிறுவனத்திற்கு கண்காணிப்பாளராக இருந்து வந்த மெக் ஐவர் மேற்பார்வையில் கடந்த 1848ம் ஆண்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது.

இப்பூங்காவில், பல்வேறு தாவரங்கள், மரங்கள், மூலிகை செடிகள் ஆகியன நடவு செய்யப்பட்டன. இவற்றில் பல வகையான தாவரங்கள் வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டவை. 1867ல் முழுமையான பூங்காவாக உருவானது. இன்றளவும் பல வெளிநாடுகளை சேர்ந்த தாவரங்கள், மரங்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை அலங்கரித்து வருகின்றன.

19 வருடங்கள் உழைத்து அயராது உழைத்து பூங்கா அமைப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த மெக் ஐவர் தனது 51-வது வயதில் 1876ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி மரணமடைந்தார். அவரது, உடல் ஊட்டியில் உள்ள பழமையான ஸ்டீபன் சர்ச் வளாகத்தில் கல்லரை ேதாட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு, அவருக்கு நினைவு சின்னமும் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு அரசுக்கு பல ேகாடி ரூபாய் வருவாய் ஈட்டத்தரும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவருக்கு பூங்கா நிர்வாகம் ஆண்டு தோறும் மரியாதை செலுத்தி வருகிறது. இந்நிலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மெக்ஐவரின் 147-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தோட்டக்கலை துணை இயக்குநர் ஷிபிலா மோி பங்கேற்று மெக் ஐவரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து பூங்கா உதவி இயக்குநர் பாலசங்கர், ஸ்டீபன் சர்ச் பாதர் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

The post தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரின் நினைவு தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: