மக்களுக்கு சிரமம் கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு ஏதும் செய்யவில்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

கோவை: மக்களுக்கு சிரமம் கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு ஏதும் செய்யவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கோவையில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர்; பல மாநிலங்களில் பேருந்து சேவை கட்டணம் உயர்ந்துள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய முதலமைச்சர் உத்தரவின் பேரில் கட்டண உயர்வு ஏதும் செய்யப்படவில்லை

2000 புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளார்; அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2400 பேருந்துகள் ஜெர்மன் நிறுவன பங்களிப்புடன் வாங்கவுள்ளோம்; விரைவில் புதிய பேருந்துகள் செயல்பாட்டிற்கு வரும். அகவிலைப்படி உயர்வு குறித்து ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இரு சக்கர வாகனங்களை வணிக ரீதியிலான டாக்ஸியாக பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இதற்கான ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக இல்லை. ரேபிட்டோ குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்; பைக் டாக்ஸி முறையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. பைக் டாக்ஸியை வாடகைக்கு விடும் வாகனமாக எடுத்துக்கொள்ள முடியாது இவ்வாறு கூறினார்.

 

The post மக்களுக்கு சிரமம் கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு ஏதும் செய்யவில்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: