காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட, எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்க மாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளர். வேளாண்மைத்துறைக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் தரும் வகையில் தனி பட்ஜெட் தாக்கம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளர். காவிரி டெல்டாவில் பாசன ஆறுகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பிறகு முதலமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

வேளாண்மைத்துறைக்கு தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார். மைக்கேல் பட்டியில் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் தமிழ்நாடு அரசு அதை எதிர்த்து என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை அடுத்து நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டது, காவிரி பாசன பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர்வார அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு 4.9 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி, 13.7 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். அணை திறப்புக்கு முன்னரே 4,964 கி.மீ. கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளப்பட்டது. நீர்வளத்துறை மூலம் ரூ. 90 கோடியில் கால்வாய் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, 2022-23ல் 5.36 லட்சம் ஏக்கர் பரப்பில் குருவை சாகுபடி, 13.53 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்ற ஒரு சாதனையை இவ்வாண்டும் நிகழ்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

96 சதவீத தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன, எஞ்சிய பணிகள் அடுத்த சில நாட்களில் முடிவடைந்துவிடும் என தெரிவித்துள்ளார். எந்த காரணத்தை கொண்டும் மேகதாது அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டு குறுவைத் தொகுப்பு திட்டம் விரைவில் அறிவிக்கபப்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார், அதுமட்டுமின்றி கலைஞர் பெயரில் புதிய பலக்லைக்கழகம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் ஒன்றிய அமைச்சரவையில்தான் மாற்றம் வருவது போல் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு ஒன்றிய அமைச்சரவையில்தான் மாற்றம் வருவதாக செய்திகள் வருகிறது என பதில் அளித்துள்ளார். வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்று முதல்வர் தெரிவித்துளளார். கைத்தறி, விசைத்தறிக்கு அளிக்கபப்டும் மின்சார சலுகைகள் தொடரும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் 23ம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என முதலமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட, எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்க மாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: