தஞ்சையில் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தஞ்சை: தஞ்சையில் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தஞ்சை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் டெல்டா மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கல்லணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல ரூ.90 கோடி செலவில் தூர்வாரப்படுகிறது.

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தஞ்சை சென்றடைந்தார். மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ம் திறக்கப்பட உள்ளிதை முன்னிட்டு சுமார் 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்தை சென்றடைந்தார். அப்போது அவருக்கு அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.

இன்று காலை தஞ்சை மாவட்டம் ஆலங்குடி, விண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளார். இந்நிலையில் தஞ்சையில் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தஞ்சை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் டெல்டா மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post தஞ்சையில் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: