கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ திட்டங்கள் திட்டமிடல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கரூர், ஜூன் 9: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ திட்டங்களை திட்டமிடல் தொடர்பாக 2023-24ம் ஆண்டிற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டங்களை வருடாந்திர செயல் திட்டம், மாவட்ட அளவிலான இணைப்பு குழுவில் வைத்து ஒப்புதல் பெறுதல் குறித்தும், தாட்கோ தொடர்புடைய அறிவிப்புகளை துறை அலுவலர்கள் மூலம் செயல்படுத்துவது குறித்தும், தேசிய பட்டியலினத்தோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் தொடர்புடைய பட்டியலினத்தோருக்கான மற்றும் ஆதி திராவிடர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் பழங்குடியினருக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது. நடப்பு 2023-24ம் நிதியாண்டிற்கான கரூர் மாவட்ட தாட்கோ மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் செயல்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், தாட்கோ மேலாளர் பாலமுருகன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ திட்டங்கள் திட்டமிடல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: