ஊத்துக்கோட்டையில் 3வது நாள் ஜமாபந்தி

 

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை தாலுகாவில் 3வது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று 3 வது நாளாக நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சேகர் தலைமை தாங்கினார். சார்ஆட்சியர் தாசில்தார் வசந்தி, தனி தாசில்தார் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாபந்தியின் 3 வது நாளான நேற்று அக்கரப்பாக்கம், திருநிலை, மதுரவாசல், பனையஞ்சேரி, வேலப்பாக்கம், சீயஞ்சேரி, வடமதுரை, மாம்பட்டு, கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல்மாளிகைப்பட்டு, மாளந்தூர் உள்ளிட்ட 14 கிராமங்களை சேர்ந்த மக்கள், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை என 58 மனுக்களை வழங்கினர்.

இதில் அக்கரபாக்கம் கிராமத்தில் ஏரியை ஒட்டியுள்ள கிராமத்தில் உள்ள மேய்க்கால் நிலத்தில் கட்டப்படும் ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், இது குறித்து பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றியும் மீண்டும் கட்டிடம் கட்டுகிறார்கள் என முல்லை வேந்தன் என்பவர் மனு கொடுத்துள்ளார். மேலும் பெறப்பட்ட 58 மனுக்களை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இறுதியில் தலைமை எழுத்தர் ஹேமகுமார் நன்றி கூறினார்.

The post ஊத்துக்கோட்டையில் 3வது நாள் ஜமாபந்தி appeared first on Dinakaran.

Related Stories: