ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

 

உடுமலை, ஜூன் 9: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் உடுமலை கிளை செயற்குழு கூட்டம் சங்க கட்டிடத்தில் நடந்தது. சங்க தலைவர் நடராஜன் தலைமை வகித்தார் செயற்குழு உறுப்பினர் சிவராஜ் வரவேற்றார். கடந்த மாத கூட்ட அறிக்கையை செயலாளர் அழகர்சாமி வாசித்தார். பொருளாளர் ஞானபண்டிதன் வரவு செலவு கணக்கு வாசித்து ஒப்புதல் பெற்றார். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர் களுக்கு அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் துணைத்தலைவர் சின்னச்சாமி நன்றி கூறினார்.

The post ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: