டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆஸி. 469 ரன் குவிப்பு

லண்டன்: ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் லண்டன் ஓவல் அரங்கில் நடக்கிறது. ஆஸி அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நேற்று முன்தினம் முதல் இன்னிங்சில் 85ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 327ரன் குவித்தது. களத்தில் இருந்த டிராவிஸ் 146, ஸ்மித் 95 ரன்னுடன் 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். இரண்டாவது நாளின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து 2பவுண்டரிகளை விளாசி தனது 31வது சதத்தை எட்டினார் ஸ்மித். அடுத்த சில ஓவர்களிலேயே டிராவிசும் 150 ரன்னை கடந்தார்.

இந்த 2 வீரர்களையும் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்களின் மேற்கொண்ட நீண்ட முயற்சிக்கு 92வது ஓவரில் பலன் கிடைத்தது. சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் டிராவிஸ். அவர் அப்போது 25பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 174பந்துகளில் 163ரன் விளாசி இருந்தார். டிராவிஸ்-ஸ்மித் இணை 4வது விக்கெட்டுக்கு 285குவித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது. அடுத்து கேமரான் கிரீனை வந்த வேகத்தில் 6ரன்னுக்கு வெளியேற்றினார் ஷமி. தேநீர் இடைவேளைக்கு பிறகு ஸ்மித் விக்கெட்டை ஷர்துல் சுருட்டினார். ஸ்மித் 268பந்துகளை சந்தித்து 19 பவுண்டரிகளை விளாசி 121ரன் எடுத்திருந்தார். அடுத்து களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் 5ரன் எடுத்திருந்த போது பதிலி ஆட்டக்காரராக களம் கண்ட அக்சர் ரன் அவுட்டாக்கினார்.

அதன் பிறகு இணை சேர்ந்த அலெக்ஸ் கேரி, கேப்டன் பேட் கம்மின்ஸ் இணை நிதானமாக விளையாடியது. உணவு இடைவேளைக்கு பிறகு அரை சதத்தை நெருங்கிய அலெக்சை(48ரன்), எல்பிடபிள்யூ செய்தார் ஜடேஜா. லயன் 9ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து கம்மின்ஸ் 9 ரன்னில் ஆட்டமிழக்க ஆஸி முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 121.3ஓவரில் 469ரன் குவித்தது. இந்திய தரப்பில் சிராஜ் 4, ஷமி, ஷர்துல் தலா 2, ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தனர். அதன் பிறகு இந்திய வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் முதல் இன்னிங்சை தொடங்கினர்.

சாதனை ஸ்மித்
ஸ்மித் தனது 31வது டெஸ்ட் சதத்தை நேற்று விளாசினார். அதன் மூலம்…
* இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை(தலா 9சதங்கள்) இங்கிலாந்தின் ஜோ ரூட் உடன் பகிர்ந்துக்கொண்டார்.
* ஆஸிக்காக அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

The post டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆஸி. 469 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: