மொபட்டில் வைத்து விற்ற 13 கிலோ மாவா பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

வளசரவாக்கம்: கோடம்பாக்கம் பகுதியில் மொபட்டில் வைத்து மாவா விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 13 கிலோ மாவா, மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. கோடம்பாக்கம் காமராஜர் காலனி 6வது தெருவில் மாவா தயாரித்து விற்பனை செய்வதாக கோடம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது, மொபட்டில் 2 நபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.

இதை பார்த்த போலீசார் அவர்களிடம் சென்று மொபட்டை சோதனை செய்த போது, 13.3 கிலோ மாவா பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், கோடம்பாக்கம் காமராஜர் 6வது தெருவை சேர்ந்த மூர்த்தி (49), பள்ளிக்கரணை ஏரிக்கரை காமகோடி நகர் 10வது தெருவை சேர்ந்த சுபாஷ் தாந்தி (46) ஆகியோர் கோடம்பாக்கம் பகுதியில் மாவா விற்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13.3 கிலோ மாவா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

The post மொபட்டில் வைத்து விற்ற 13 கிலோ மாவா பறிமுதல்: 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: