மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு!

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. மத்தியபிரதேசத்தின் செஹோர் மாவட்டம் அருகே முங்கோலி கிராமத்தை சேர்ந்த இரண்டரை வயது பெண் குழந்தை, அப்பகுதியில் உள்ள வயலில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

தகவலறிந்து மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். முதலில் 20 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை, மேலும் 50 அடி சரிந்ததால் மீட்பு பணி மிக தீவிரமாக நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,100 அடியில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை, 3 நாட்கள் இடைவிடாது போராடி ராணுவ வீரர்கள் மீட்டுள்ளனர். 52 மணி நேரம் நடந்த தொடர் மீட்புப் பணியில் குழந்தை மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட குழந்தை மயக்கநிலையில் இருப்பதால் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மீட்கப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. குழந்தையை மீட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த கிராமத்தை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: