புரோ ஹாக்கி லீக்: நெதர்லாந்திடம் இந்தியா தோல்வி

லண்டன்: 9 அணிகள் பங்கேற்றுள்ள 4வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா நேற்றிரவு தனது 13வது லீக் போட்டியில், நெதர்லாந்துடன் மோதியது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். அதன்பின்னர் நெதர்லாந்து 16, 39, 40 மற்றும் 57வது நிமிடங்களில் கோல் அடித்தது.

முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்றது. இந்தியா 13 போட்டியில் 6 வெற்றி, 3 டிரா, 4 தோல்வி என 24 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 8.40 மணிக்கு அர்ஜென்டினாவுடன் இந்தியா மோதுகிறது.

The post புரோ ஹாக்கி லீக்: நெதர்லாந்திடம் இந்தியா தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: