கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

டெல்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாட்டிற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் பருவமழையாக தென்மேற்கு பருவமழை பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவழை ஆண்டுதோறும் பரவலாக பெய்யும். குறிப்பாக கேரளாவில் தான் தென்மேற்கு பருவழை முதல் முதலாக தொடங்கும். அதன்பிறகு கர்நாடகா, மும்பை, கோவா, கொல்கத்தா தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கும்.

வழக்கமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை என்பது மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல்வாரத்தில் தொடங்கிவிடும். இந்த முறையும் ஜூன் 1ம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் தொடங்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. இதனால் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை கா லம் தொடங்காமல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கேரளா, தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன் 1ம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டிலும் 48 மணி நேரத்தில் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: