ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்.. 5 ஆண்டுகள் இயங்க தடையில்லா சான்று : அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஸ்டான்லி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகள் ஐந்தாண்டுகள் தொடர்ந்து இயங்க ஒன்றிய அரசு தடையில்லா சான்று வழங்கியுள்ளது. அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது என்ற அறிக்கையை ஒன்றிய அரசால வாபஸ் பெறப்பட்டது. 2 மருத்துவ கல்லூரிகளில் இருந்த சிசிடிவி கேமரா, பயோமெட்ரிக் போன்ற குறைகளும் சரிசெய்யப்பட்டு விட்டது. ஒன்றிய அரசின் அனுமதி தொடர்பான எழுத்துப்பூர்வ உத்தரவு விரைவில் கிடைத்துவிடும்.

தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.நாளை ஆய்வு முடிந்தவுடன் திருச்சி மருத்துவ கல்லூரிக்கும் தீர்வு காணப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.பல்நோக்கு மருத்துவமனையில் 872 தூய்மைப் பணியாளர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும். ஆர்.சி.எச் பணியிடங்களை நிரப்ப அனைத்து ஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன,”என்றார்.

The post ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்.. 5 ஆண்டுகள் இயங்க தடையில்லா சான்று : அமைச்சர் மா.சுப்ரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: