கச்சா எண்ணெய் விலையின் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு..!!

டெல்லி: இழப்பில் இருந்து மீண்டு விட்டதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்தியாவில் கடந்த வருடம் பாதி வரை பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து 383வது நாளாக அதே விலையில் விற்கப்படுகிறது.

சென்னையில் இன்று (ஜூன் 8) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாகவே சென்னையில் பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 140 டாலரில் இருந்து 72 டாலராக குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. இந்நிலையில், இழப்பில் இருந்து மீண்டு விட்டதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கச்சா எண்ணெய் விலையின் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post கச்சா எண்ணெய் விலையின் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: