ஜூன் மாத இறுதிக்குள் ஒன்றிய அமைச்சரவையை மாற்றி அமைக்க பாஜக முடிவு.. வேளாண்மை, நிதி, நீர் வளம், சுற்றுசூழல் துறைகளில் மாற்றம்!!

டெல்லி : ஜூன் மாத இறுதிக்குள் ஒன்றிய அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்து பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் டெல்லியில் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையை விரைவில் மாற்றம் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், கடந்த திங்கட் கிழமை முதல் டெல்லியில் பாஜக கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்து ஒன்றிய அமைச்சரவையை சிறிய அளவில் மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி இம்மாத இறுதியில் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக மேற்கொள்ள இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சில அமைச்சர்களை பதவியில் இருந்து விடுவித்து 2024 பொதுத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்க பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். வேளாண்மை, நிதி, நீர் வளம், சுற்றுசூழல் மின்சாரம், விமான போக்குவரத்து, கிராமப்புற வளர்ச்சி ஆகிய துறை அமைச்சர் பதவிகளில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இத்துடன் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், தெலுங்கனா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக கட்சி நிர்வாகிகளை மாற்றவும் அக்கட்சி மைய தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

The post ஜூன் மாத இறுதிக்குள் ஒன்றிய அமைச்சரவையை மாற்றி அமைக்க பாஜக முடிவு.. வேளாண்மை, நிதி, நீர் வளம், சுற்றுசூழல் துறைகளில் மாற்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: