ஆளுநர் பதவிக்குள் பதுங்கிக் கொண்டு அரசியல் செய்ய முனையக் கூடாது : திமுக நாளேடு கண்டனம்

சென்னை : ஆளுநர் பதவிக்குள் பதுங்கிக் கொண்டு அரசியல் செய்ய முனையக் கூடாது என்று முரசொலியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முரசொலியில் வெளியாகியுள்ள கட்டுரையில், “ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேராக அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும். அதைவிட்டு ஆளுநர் பதவிக்குள் பதுங்கிக் கொண்டு அரசியல் செய்ய முனையக் கூடாது. ஜாகையை கமலாலயத்திற்கு மாற்றிக் கொண்டு களத்துக்கு வரட்டும். அப்போது முழு மையாக வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை!ஒரு நியமனப் பதவியில் உட்கார்ந்து கொண்டு தினமும் அவர் செய்து கொண்டு வரும் குடைச்சல்கள் சகிக்க முடியாதவையாக இருக்கின் றன. அவர் ஏதோ இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரைப் போலவோ அல்லது இந்திய மன்னரைப் போலவோ மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார். தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிரான அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறார் ஆர்.என். இரவி. அதேநேரத்தில் மற்ற பல மாநிலத்தின் விழாக்களை இங்கே உட்கார்ந்து கொண்டு கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.

* குஜராத் மாநிலம் உருவான தினம்
* மகாராஷ்டிரா மாநிலம் உருவான தினம் * மிசோரம் மாநிலம் உருவான தினம் *கோவா மாநிலம் உருவான தினம்
* தெலுங்கானா மாநிலம் உருவான தினம் –
என்று மற்ற மாநிலங்கள் உருவான தினத்தைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். பொழுது போகவில்லை என்றால் ஊரில் உள்ள அனைவர் பிறந்தநாளையும் கொண்டாடிக் கொள்ள வேண்டியது தான். மனதுக்குள் இந்திய நாட்டையே தான் ஆள்வதாக அவர் நினைத் துக் கொள்கிறார் போலும்!

‘தமிழ்நாடு’ என்று சொல்லக் கூடாதாம். ஆனால் மற்ற மாநில விழாக் களை தமிழ்நாட்டில் கொண்டாடுவாராம். ‘மாநிலங்களே எதற்காக?’ என்று கேட்பாராம். ஆனால் வாராவாரம் மாநில விழாக்களைக் கொண்டா டுவாராம். ‘மாநிலங்களே இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்கிற தாம்’. ஆனால் அவர் மட்டும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்து கொண்டு அதிகாரத்தை அனுபவிப்பாராம். எத்தகைய ஏமாற்று இது?!

புதிய கல்விக் கொள்கையை வலியுறுத்தும் வகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தப் போவதாக ஆளுநர் சொன்னார். இணைவேந்தரான எனக்கே தெரிவிக்காமல் துணைவேந்தர்கள் கூட்டத்தை எப்படி நடத்தலாம்?’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் பொன்முடி கேட்டார். உடனே பதுங்கினார் ஆளுநர். ” என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளது.

The post ஆளுநர் பதவிக்குள் பதுங்கிக் கொண்டு அரசியல் செய்ய முனையக் கூடாது : திமுக நாளேடு கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: