பிரதான குழாயில் உடைப்பு சீரமைப்பு பணி திருச்சி மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து

திருச்சி, ஜூன் 8: பிரதான குடிநீர் குழாயில் உடைப்பை சரி செய்யும் பணி காரணமாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகராட்சி பராமரிப்பின்கீழ் இயங்கி வரும் பொது தரைமட்ட கிணறு நீர் உந்து நிலையத்தில் இருந்து உந்தப்படும் பிரதான குழாயில் திருச்சி -சென்னை மெயின் ரோடு பால்பண்ணை அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சரி செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

இதனால் தேவதானம், விறகுபேட்டை புதியது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, மகாலட்சுமி நகர் ஆகிய 11 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு இன்று (8ம் தேதி) குடிநீர் விநியோகம் இருக்காது. இந்த பகுதிகளில் நாளை (9ம் தேதி) வழக்கம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் கூறியுள்ளார்.

The post பிரதான குழாயில் உடைப்பு சீரமைப்பு பணி திருச்சி மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: