திருவாரூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு; உணவு பொருளில் கலப்படமா? புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப்

திருவாரூர், ஜூன் 8: உணவி பொருட்களில் கலப்படம் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் (9444042322) உள்ளது என்று திருவாரூரில் நடந்த கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இன்றே பாதுகாப்பான உணவை தேர்வு செய்யுங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.

ஆரோக்கியமான உணவை தேர்வு செய்வதில் நமது கடமையும், பொறுப்பும் என்ற தலைப்பில் மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் க.திருநாவுக்கரசு பேசுகையில், ”சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணவுகள் தினசரி எண்ணற்ற உயிர்களை அழிக்கும். உலகில், நல்ல சுகாதார நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது. அசுத்தமான உணவை உட்கொள்வதால் ஏற்படும் உணவால் பரவும் நோய்கள், நமது ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கின்றன.

இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள, நாங்கள் நாம் உண்ணும் உணவு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் ரசாயனங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு உணவையும் கையாளுவதற்கு முன் குறைந்தது 20 வினாடிகளுக்கு உங்கள் கைகளை வெதுவெதுப்பான சோப்பு நீரில் கழுவத் தொடங்குங்கள். சரியான கை சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றவும் மற்றும் மாசுபடுவதை தடுக்கவும். உங்கள் சமையலறை மேற்பரப்புகளை சுத்தமாகவும், சுத்தப்படுத்தப்பட்டதாகவும் வைத்திருங்கள். பொருட்களின் புத்துணர்ச்சி மற்றும் தூய்மையை உறுதிப்படுத்தவும். சமைப்பதற்கு அல்லது சாப்பிடுவதற்கு முன் ஏதேனும் கெட்டுப்போன அல்லது சேதத்தின் அறிகுறிகள் உள்ளதா என சரிபார்க்கவும். சந்தேகத்திற்குரிய உணவுப் பொருட்களை வேண்டாம் என்று சொல்லுங்கள்.

ஆரம்பத்திலிருந்தே, ஃப்ரிட்ஜில் பச்சையாகவும் சமைத்ததாகவும் பிரிக்கவும். சமைத்த உணவை உயரமான அலமாரிகளில் வைக்கும்போது, பச்சையான உணவை மூடி வைக்கவும் என்று கூறினார். மாணவ, மாணவிகள் தங்கள் வீட்டில் பயன்படுத்தும் டீ தூள், நெய், பால், உப்பு ஆகியவற்றில் கலப்படம் குறித்த ஆய்வை, மாணவ, மாணவிகள் முன்னிலையில் மையத்தின் வேதியியல் ஆய்வாளர் அ.அகிலன் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தார். உணவுப்பொருள் கலப்படம் குறித்து புகார்கள் அரசிற்கு தெரிவித்திட வாட்ஸ் ஆப் எண் (9444042322) மற்றும் ஸ்மார்ட்போன் செயலில் புகார்களின் நிலை, தெரிந்துகொள்ளும் அளவிற்கு வசதியை தமிழக அரசு உணவு பாதுக்காப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் மையத்தின் உணவு இயக்குநர் ரவிச்சந்திரன், திட்ட இயக்குநர் உமாபாரதி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு; உணவு பொருளில் கலப்படமா? புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் appeared first on Dinakaran.

Related Stories: