கொள்ளிடம், ஜூன் 8: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு ஊராட்சிகளும் மின்விளக்குகள் அமைத்தல் புதிய மின் கம்பங்கள் அமைத்தல் மின்விளக்குகள் புதியதாக வாங்குதல் மின்விளக்குகள் பழுதானால் அதற்கு பதிலாக புதியதாக வாங்கி பொருத்துதல் மற்றும் குடிநீர் குழாய்கள் பொருத்துதல் புதிய குடிநீர் குழாய்களை வாங்கி பொருத்துதல் குடிநீர் அளிப்பது குடிநீர் பெறுவதற்கு தேவையான குழாய்கள் மற்றும் உள்ளிட்ட இதர சாதனங்கள் வாங்குவதற்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒன்றாம் எண் கணக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த கணக்கில் ஊராட்சிகளின் அடிப்படை தேவைக்குரிய பொருள்கள் வாங்கியதற்கான கணக்கு பதிவு செய்யப்படுகிறது.
அந்த செலவுத்தொகை ஒன்றாம் எண் கணக்கிலிருந்து வங்கியின் மூலம் எடுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ செலவிடுவதற்கு ஏற்றவாறு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை ஊராட்சி சார்பில் தன்னிச்சையாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் சலவீடு செய்து ஒன்றாம் எண் வங்கி கணக்கில் பதிவிடுகின்ற செய்யப்படுகிறது.இந்த செலவினங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா முறையாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்ற ஆய்வு முறையாக நடை பெறவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், அரசின் நிதி குறித்த மற்றும் செலவினங்கள் குறித்த வெளிப்படையான தன்மை இதுவரையில் இல்லாமலேயே இருந்து வருகிறது. வெளிப்படைத் தன்மை தெரியாமல் உள்ளதால் கிராம மக்களும் இதனை அறியாமல் இருந்து வருகின்றனர். எனவே இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து என்ன நடந்தது என்பதை தெரிவிக்காமல் சென்று விடுகின்றனர். எனவே அனைத்து அடிப்படை செலவினங்களையும் நிறைவேற்றும் வகையில் பொதுமக்கள் பயனடையும் வகையில் நிறைவேற்றித் தரும் வகையில் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடத்தி மக்களிடம் வெளிப்படையான தன்மையை உருவாக்க வேண்டும் மேலும் ஊராட்சிக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கி வரும் குடிநீர் பெறுவதற்கு மற்றும் மின்விளக்கு பெறுவதற்கு அதற்குரிய சாதனங்களை அரசே நேரடியாக ஊராட்சிகளுக்கு தரமானதாக வாங்கி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை சாதனங்களை அரசே வழங்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.