கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

கரூர், ஜூன்7: கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று காலை நடைபெற்றது. கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் 2023-24ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கல்லூரியில் உள்ள 1260 இடங்களுக்கு 7ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, அரசு கலைக் கல்லூரி ஆடிட்டோரியத்தில் கடந்த 30ம்தேதி சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. 114 இடங்களுக்கு 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். கல்லூரி முதல்வர் (பொ) அலெக்ஸாண்டர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஜூன் 2ம்தேதி கல்லூரி ஆடிட்டோரியத்தில் இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்விலும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 5ம்தேதி வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்றது. பிகாம், பிகாம் சிஏ, பிபிஏ போன்ற நான்கு பாடப்பிரிவுகளில் 60 இடங்களே உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று இளங்கலை வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த கலந்தயாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: