அக்னி முடிந்தும் அச்சுறுத்தும் வெயில் வத்திராயிருப்பில் வெறிச்சோடிய சாலைகள்

வத்திராயிருப்பு, ஜூன் 8: அக்னி வெயில் முடிந்தும் வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, சுந்தரபாண்டியம், புதுப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. வெயிலின் தாக்கத்தால் தகரம், ஓடு, சிமெண்ட் ஓடு உள்ளிட்ட வீடுகளில் குடியிருப்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வெயிலால் வெளியே பொதுமக்கள் நடமாட அச்சப்படுகிறார்கள். வத்திராயிருப்பில் முத்தாலம்மன் திடல் பகுதி, நாடார் பஜார் உள்ளிட்ட இடங்களில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து அதிகரித்து காணப்படும்.

வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த அளவே உள்ளதால் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. இரவு நேரங்களில் புழுக்கத்தால் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றி வருகிறது. எனவே வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்யுமா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

The post அக்னி முடிந்தும் அச்சுறுத்தும் வெயில் வத்திராயிருப்பில் வெறிச்சோடிய சாலைகள் appeared first on Dinakaran.

Related Stories: