வத்தலக்குண்டுவில் பல நாட்களாக காய்கறிகளை திருடி வந்த பாஸ்ட்புட் கடைக்காரர் கைது

வத்தலக்குண்டு ஜூன் 8: வத்தலக்குண்டுவில் காய்கறி மொத்த கடையில் தினசரி விலை உயர்ந்த காய்கறிகளை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.வத்தலக்குண்டு-மதுரை சாலையில் சிஎஸ்ஐ தேவாலயம் எதிர்புறம் காய்கறி மொத்த கடை வைத்திருப்பவர் செந்தில்குமார். இவர் காய்கறிகளுக்கு காற்றோட்டம் வேண்டும் என்பதால் கடைக்கு முன் புறம் காய்கறிகளை வைத்து சுற்றியே தார்ப்பாய் சுற்றி அடைத்து செல்வது வழக்கம்.

அதே பகுதியில் பாஸ்ட்புட் கடை வைத்திருப்பவர் கிருஷ்ணகுமார்(38). இவர் இரவு 12 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தார்பாயை தூக்கிக் கொண்டு உள்ளே சென்று பட்டர் பீன்ஸ் , பச்சைபட்டாணிபோன்ற விலையுயர்ந்த காய்கறிகளை திருடி வந்துள்ளார். தனது கடைக்கு தேவையான காய்கறியை எடுத்துக் கொண்டு மீதியை கிருஷ்ணகுமார் விற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் செந்தில்குமார் கல்லாவில் ரூ500 இருப்பு வைத்து விட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது ரூ.500 மாயமாகி இருந்தது. மேலும் 5 ஆயிரம் மதிப்புள்ள காய்கறிகளும் அள்ளப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். வத்தலக்குண்டு எஸ்ஐ ரமேஷ் மற்றும் போலீசார் செந்தில் காய்கறி கடைக்கு சென்றுஅங்குள்ள சிசிடி கேமராவைஆய்வு செய்தனர். அதில் கிருஷ்ணகுமார் இரவில் காய்கறிகளை திருடுவது பதிவாகிஇருந்தது.அதைத் தொடர்ந்து போலீசார் கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வத்தலக்குண்டுவில் பல நாட்களாக காய்கறிகளை திருடி வந்த பாஸ்ட்புட் கடைக்காரர் கைது appeared first on Dinakaran.

Related Stories: