தென்திருப்பேரையில் புதிய கால்நடை மருத்துவமனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார் ‘

வைகுண்டம், ஜூன் 8: தென்திருப்பேரையில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். தென்திருப்பேரையில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனை பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, வைகுண்டம் முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர், தூத்துக்குடி மாவட்ட கால்நடை இணை இயக்குநர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) ஆண்டனி சுரேஷ், உதவி இயக்குனர் ஜோசப் ராஜ், கால்நடை மருத்துவர்கள் சுரேஷ், செந்தில் கண்ணன், பிரதீப், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், மத்திய ஒன்றிய அவை மகரபூசனம், தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், செயல் அலுவலர் ரமேஷ் பாபு, துணை தலைவர் அமிர்த வள்ளி, நகர செயலாளர் முத்துவீரபெருமாள், கவுன்சிலர்கள் ஆனந்த், சண்முக சுந்தரம், சீதா லட்சுமி, மாரியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post தென்திருப்பேரையில் புதிய கால்நடை மருத்துவமனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார் ‘ appeared first on Dinakaran.

Related Stories: