சென்னை கிண்டியில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை, மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள சாலைகளில் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானிய கோரிக்கையின் போது பொதுப்பணிகள் கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார்.

கலைஞரின் நூற்றாண்டு விழா துவக்க நாளான (07.06.2023) இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.

இன்று (07.06.2023) தமிழகமெங்கும் நெடுஞ்சாலை துறையின் 340 சாலைகளில் சுமார் 46,410 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மேலும் பருவமழைக்கு முன்பாகவே (அதாவது 31.10.2023 க்குள்) 5 இலட்சம் மரக்கன்றுகளையும் நடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்விழாவில் பொதுப்பணிகள் கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
எ.வ.வேலு, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அண்ணாதுரை, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் சாந்தி, அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை கிண்டியில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: