மணிப்பூரில் ஆம்புலன்சில் மகன், தாய், உறவுபெண் எரித்து கொலை

இம்பால்: மணிப்பூரில் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 8 வயது சிறுவன், அவரது தாயார் மற்றும் பெண் உறவினர் ஆகிய 3 பேர் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர். அந்த ஆம்புலன்ஸ் மேற்கு இம்பால் நோக்கி சென்றது. திடீரென அந்த ஆம்புலன்சை ஒரு கும்பல் வழிமறித்து அவர்களை தாக்கியது. தொடர்ந்து அந்த கும்பல் ஆம்புலன்சோடு சேர்த்து மூவருக்கும் தீ வைத்தது. இதில் 3 பேரும் உடல் கருகி பலியாகினர். மேற்கண்ட சம்பவம் மே 4ம் தேதி காங்போக்பி மாவட்டம் காங்சுப் கிராமத்தில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மணிப்பூரில் ஆம்புலன்சில் மகன், தாய், உறவுபெண் எரித்து கொலை appeared first on Dinakaran.

Related Stories: