ரஷ்யாவில் கலப்பட மதுபானம் குடித்து 30 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

மாஸ்கோ : ரஷ்யாவில் கலப்பட மதுபானம் குடித்து 30 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் உல்யாநோவ்ஸ்க் என்ற பகுதியில் ஆப்பிள் ஜூஸ்-ல் இருந்து தயாரிக்கப்படும் சைடர் என்ற மதுபானத்தை சிலர் அருந்தி உள்ளனர். மிஸ்டர் சைடர் என்ற கலப்பட மதுபானத்தை அருந்தியதால் 20 பேர் உயிரிழந்ததாக உல்யாநோவ்ஸ்க் மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே போல சமாரா, நிஸ்னி நோவ்கோரோட் மற்றும் உட்முர்டியா ஆகிய இடங்களில் 10 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் விற்பனையில் உள்ள மதுபானத்தை திரும்பப் பெற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுபானத்தில் அதிகளவு மெத்தனால் இருந்ததை உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

The post ரஷ்யாவில் கலப்பட மதுபானம் குடித்து 30 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!! appeared first on Dinakaran.

Related Stories: