முத்துப்பேட்டையில் கொள்ளையர்களை பிடித்த எஸ்பி, டிஎஸ்பி, போலீசாருக்கு பாராட்டு

 

முத்துப்பேட்டை, ஜூன் 7: முத்துப்பேட்டையில் கொள்ளையர்களை பிடித்த எஸ்பி, டிஎஸ்பி, போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னாத்தூரில் உள்ள சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் கண்ணன் விட்டில் இருந்த அவரது மனைவி சங்கீதாவிடம் கொள்ளையர்கள் 2 பேர் பவுன் நகையை கத்தியை காட்டி பறித்து சென்று அலையாத்திக்காட்டில் பதுகிங்கினர். இதில் முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் கொளையர்களை சினிமாவை மிஞ்சும் வகையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சிறப்பாக செயல்பட்ட போலீசாரை பொதுமக்கள் நேரடியாகவும், சமூக வலைத்தளம் வழியாகவும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் முத்துப்பேட்டை வர்த்தகக் கழக நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள், காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் நேற்று முத்துப்பேட்டை காவல் நிலையம் வந்து இந்த நடவடிக்கைக்கு உத்தரவு வழங்கிய திருவாரூர் எஸ்பி சுரேஷ்குமார், கொள்ளையர்களை பிடிக்க நேரடியாக களத்தில் இறங்கிய முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த போலீசார், இதுபோன்று எப்போதும் உங்களுக்கு தாங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அவர்களிடம் மகிழ்ச்சி தெரிவித்தனர். தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க உதவி புரிந்த மீனவர் செம்பட வன்காடு கண்ணன் என்பவரை எஸ்பி சுரேஷ்குமார் பாராட்டி பரிசு வழங்கினார் அப்போது நாகை எம்பி செல்வராஜ் உட்பட பலரும் உடன் இருந்தனர்.

The post முத்துப்பேட்டையில் கொள்ளையர்களை பிடித்த எஸ்பி, டிஎஸ்பி, போலீசாருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: