குளித்தலை ஒன்றிய அலுவலகத்தில் கழிவு செய்யப்பட்ட வாகனம் பொது ஏலம்

 

கரூர், ஜூன்7: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் முதிரா நிலையில் உள்ள கழிவு செய்யப்பட்ட வாகனம் பொது ஏலமானது ஜூன் 15ம்தேதி காலை 11மணிக்கு குளித்தலை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஏலத்திற்கு உண்டான வாகனம் குளித்தலை ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஜூன் 1ம்தேதி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஏலம எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 14ம்தேதி காலை 10 மணி முதல் 15ம்தேதி காலை 11மணி வரை ஈப்பிற்கு ரூ. 2000ம் முன் வைப்பு தொகையை செலுத்தி ஏலும் எடுக்க பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஏலம் எடுத்தவர்கள் ஏலத் தொகையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ஏலத் தொகை மற்றும் ஜிஎஸ்டி விற்பனை வரியுடன் சேர்த்து 15ம்தேதி அன்று உடனே செலுத்திட வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குளித்தலை ஒன்றிய அலுவலகத்தில் கழிவு செய்யப்பட்ட வாகனம் பொது ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: