குளித்தலை, ஜூன் 7: கரூர் மாவட்டம் குளித்தலை மேற்கு ஒன்றிய திமுக ராஜேந்திரம் ஊராட்சியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 100வது பிறந்த நாளை ஒட்டி 100 பள்ளி மாணவ மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி ராஜேந்திரம் ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன் தலைமை வகித்து திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி 100 பள்ளி மாணவ மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் எழுதுபொருள் வழங்கினார். இதில் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி, மருதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சம்பத், குளித்தலை ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சச்சின் ராம், மாணவரணி விக்னேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post கலைஞர் 100வது பிறந்த நாள்: குளித்தலை ராஜேந்திரத்தில் 100 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல் appeared first on Dinakaran.