வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ விபத்து- ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

 

வெள்ளகோவில், ஜூன் 7: வெள்ளகோவில் அருகே நுால் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதமானது. வெள்ளகோவில் முத்தூர் ரோடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (41) என்பவருக்கு சொந்தமாக வெள்ளகோவில் வெள்ளமடை பகுதியில் நூல் மில், (கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிப்பு) கடந்த ஐந்து வருடங்களாக வைத்து நடத்தி வருகிறார். இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று பகல் மாலை 4 மணி அளவில் மில்லில் திடீரென கரும்புகை வெளியேறியது. அங்குள்ள ஒரு பகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பிடித்து எரிந்தது. தகவலந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்ட குழுவின் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ அதிகமாக பரவியதை அடுத்து நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இருப்பினும் நூல், இயந்திரம், கட்டடம் என ரூ.20 லட்சம் அளவிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ விபத்து- ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: