தச்சை கணேசராஜா பிறந்தநாள் டவுன் சந்தி பிள்ளையார் கோயிலில் அதிமுக சார்பில் சிறப்பு வழிபாடு

நெல்லை, ஜூன் 7: நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா பிறந்த நாள் விழா கட்சியினரால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிமுக சார்பில் டவுன் சந்தி பிள்ளையார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதலை மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா துவக்கிவைத்தார். இதில் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஜாகிர் உசேன், டால் சரவணன், விவசாய அணி மாவட்டச் செயலாளர் கனித்துரை, சிறுபான்மை பிரிவு தாழை மீரான், பழனி சுப்பையா, வட்டச் செயலாளர் பாறையடி மணி, செந்தில் ஆறுமுகம், வசந்தா ரவி, ஆர்எஸ்.மணி, வெள்ளரி ஐயப்பன், டிகேசி சொக்கலிங்கம், மேலமைப்பு பிரதிநிதி கந்தசாமி, சென்ட்ரல் தியேட்டர் சொரிமுத்து, சரவணன், காசிம்பாய், குமார், கார்த்தி, மாநில பேச்சாளர் வாஸ்து தளவாய், சேகர் தங்கம், மணிகண்டன், கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்டப் பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன் செய்திருந்தார்.

The post தச்சை கணேசராஜா பிறந்தநாள் டவுன் சந்தி பிள்ளையார் கோயிலில் அதிமுக சார்பில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: