சில்லி பாயின்ட்…

* வலைப்பயிற்சியின்போது இந்திய அணி கேப்டன் ரோகித் இடது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. எனினும், பைனலில் அவர் களமிறங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பிரெஞ்ச் ஓபன் காலிறுதியில் உக்ரைனின் ஸ்விடோலினாவுடன் மோதிய பெலாரஸ் நட்சத்திரம் சபலென்கா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

* தென் கொரியாவில் நடக்கும் ஆசிய யு-20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் டெகத்லான் பிரிவில் (10 போட்டிகள்) மொத்தம் 7003 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்த இந்திய வீரர் சுனில் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

* சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், ராஜ்வத் 2வது சுற்றுக்கு முன்னேற, நட்சத்திர வீராங்கனைகள் சிந்து, சாய்னா முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: