உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது, கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு இடது கட்டை விரலில் காயம்!

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது, கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தை தொடர்ந்து அவர் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை (07.06.2023) தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றது.

இதையொட்டி ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்று வரலாறு படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரோகித் சர்மாவின் இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், காயத்தை தொடர்ந்து அவர் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த காயம் பெரிய அளவிலான காயம் இல்லை எனவும் ரோகித் சர்மா நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது, கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு இடது கட்டை விரலில் காயம்! appeared first on Dinakaran.

Related Stories: