யானையின் போக்கு வனத்துறைக்கு தான் தெரியும்; யனையை இங்கே விட வேண்டும், அங்கே விட வேண்டும் என உத்தரவிட முடியது: ஐகோர்ட் கிளை

மதுரை: தமிழ்நாடு அரசு மிகுந்த சிரமப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து அரிசி கொம்பன் யனையை பிடித்துள்ளது. யனையை இங்கே விட வேண்டும், அங்கே விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க முடியது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 தினங்களுக்கு கேரளா பகுதியை சேர்ந்த யானை தேனி கம்பம் பகுதியில் உள்ளே நுழைந்தது. அந்த அரிசி கொம்பன் என்ற யானை அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தோப்புக்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி அந்த யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

அந்த யானையை பிடிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நிபுணர்கள் குழு அமைத்து, கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டு இந்த யானையை தமிழக அரசு நேற்று முன்தினம் இரவு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, நெல்லை மாவட்டம் முண்டகாடு என்ற பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கேரளாவை சேர்ந்த நபர் இந்த யானை கேரளாவை சார்ந்தது. இந்த யானையை மதிகெட்டான் சோலை வனப்பகுதியில் தான் விடவேண்டும். நெல்லை மாவட்ட வனப்பகுதியில் விட தடை விதிக்க வேண்டும் என உயநீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்ட்டோரிய கெளரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்காக தெரிகிறது. யானையை தமிழக அரசு மிகுந்த சிரமப்பட்டு, பல லட்சம் ரூபாய் செலவு செய்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், யானையை இங்கு விட வேண்டும், அங்கு விடவேண்டும் என்றெல்லாம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது, நீதிமன்றம் அதற்கான இடமும் கிடையாது. ஏனென்றால் யானையின் போக்கு வனத்துறைக்கு தான் தெரியும். அதன் அடிப்படையில், அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரையில், யானைகள் மாற்றம் வன விலங்குகள் குறித்து உயர்நீதிமன்றம் ஒரு சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த அமர்வில் இந்த வழக்கு விசாரணையை நடத்தலாம் என்று கூறி வழக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டனர்.

The post யானையின் போக்கு வனத்துறைக்கு தான் தெரியும்; யனையை இங்கே விட வேண்டும், அங்கே விட வேண்டும் என உத்தரவிட முடியது: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Related Stories: