உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் உலக சுற்றுச்சூழல் தினவிழா

திருச்சி, ஜூன்.6: தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா ‘‘பிளாஸ்டிக் எனும் எமன்” விழிப்புணர்வு கையேடு மற்றும் துணிப்பை உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. மக்கள் சக்தி இயக்கம் மாநிலப்பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான நீலமேகம் தலைமையில் வகித்து பேசும்போது, பெருகி வரும் மக்கள் தொகையாலும், தொழிற் சாலைக்கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி மேலும் மேலும் இந்த பூமியில் `சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமானால் இந்த பூமியில் வாழும் உயிரினங்களுக்குத்தான் ஆபத்து விளைவிக்கும். சுற்றுச்சூழல் சமநிலை என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வுக்கு அவசியமானது. இந்த சம நிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமையும். நம்மைச் சுற்றியிருக்கும் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக் கருதி முன்னோர் வழிபட்டதால், அவற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை அவர்களுக்கு இயல்பிலேயே இருந்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்று பார்த்தால், அதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் நடுவது.

அடுத்தபடியாக, தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்துவது. இயற்கை விவசாய முறைகளைக் கையாளுதல் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல் போன்றவற்றை சொல்லலாம்’ என்றார். தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் சதீஷ்குமார், நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜா, குமரன், தமிழன் சிலம்பம் பாசறை மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் உலக சுற்றுச்சூழல் தினவிழா appeared first on Dinakaran.

Related Stories: