ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 6: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலையில் தனியார் வங்கி ஏடிஎம் இயங்கி வருகின்றது. கடந்த 3ம்தேதி இரவு மர்மநபர்கள் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் ஏடிஎம் மெஷினை உடைக்க முடியாததால் அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டனர். இதுகுறித்து பணம் நிரப்ப வந்த காட்டூர் நாயக்கன் கோட்டை பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வன் திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

The post ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: