வேதாரண்யத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

வேதாரண்யம், ஜூன்6: தமிழகமெங்கும் 2023-24ம் கல்வியாண்டிற்கு நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு அதற்கான பயிற்சி நடைபெறுகிறது. வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஆயக்காரன்புலம் இரா.நடேசனார் மேல்நிலைப்பள்ளியிலும் 164 ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது. இதற்காக மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் எண்ணும் எழுத்தும் தமிழ் மற்றும் சமூக அறிவியல் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பழனிச்சாமி (பொ), வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், ராமலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்பசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தமிழ் மற்றும் சமூக அறிவியலுக்கான பயிற்சியை மாவட்ட கருத்தாளர்கள் நீலமேகம், முருகானந்தம், பரமசிவம், சிவபாலன் ஆகியோர் எண்ணும் எழுத்திற்கான களஞ்சியங்களை சிறப்பாக காட்சிப்படுத்தி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு இந்த எண்ணும் எழுத்து திட்டத்தினை எடுத்துச் செல்வதற்கு ஆயத்தமாக இந்த பயிற்சி வழங்கப்பட்டது. என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்

The post வேதாரண்யத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: