யுனெஸ்கோ விருதுக்கு தேர்வாகியுள்ள ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். யுனெஸ்கோ அமைப்பால் வழங்கப்படும் விருதுக்கு தேர்வாகியுள்ளதற்காக ஜகதீஷுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான ஜகதீஷ் யுனெஸ்கோ அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான (#BiosphereReserveManagement) #MichelBatisseAwardக்குத் தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவருக்கு நம் பாராட்டுகள். நமது அரசு அமைத்த மரைன் எலைட் படையால்தான் இது சாத்தியமானது என ஜகதீஷ் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். ஜூன்14 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறவுள்ளதோடு, மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக அரங்கில் விளக்கிக் காட்டவுள்ள ஜகதீஷ் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post யுனெஸ்கோ விருதுக்கு தேர்வாகியுள்ள ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: