நெல்லையில் அதிகாலை அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 5 பயணிகள் படுகாயம்

நெல்லை, ஜூன் 6: ஊட்டியில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்ட அரசு விரைவு சொகுசு பஸ்சானது நேற்று அதிகாலை நெல்லை நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சை பின்தொடர்ந்து நெய்வேலியில் இருந்து மற்றொரு அரசு விரைவு பஸ் கன்னியாகுமரி நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்த இரு பஸ்களும் நேற்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு தச்சநல்லூர் கரையிருப்பு அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வந்த போது பின்னால் வந்த பஸ் முந்திச்ெசல்ல முயன்றதாகத் தெரிகிறது. இதில் முன்னால் ஊட்டியில் இருந்து வந்த பஸ் மீது உரசியது.

அப்போது ஊட்டியில் இருந்த கன்னியாகுமரி சென்ற பஸ்சானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி பக்கவாட்டு பகுதியில் பாய்ந்து அங்குள்ள தனியார் பள்ளி காம்பவுன்டு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் நெய்வேலியில் இருந்து வந்த பஸ்சின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேருக்கு காயம், ஏற்பட்டது. மின்கம்பம் ஒன்றும் சேதமடைந்தது.

தகவலறிந்ததும் விரைந்துவந்த தச்சநல்லூர் போலீசார், போக்குவரத்து போலீசார், தீயணைப்பு மீட்பு படையினர், அரசு விரைவு போக்குவரத்துக்கழக மீட்பு குழுவினர், மின்வாரியத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த அனைவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்றவர்களையும் பஸ்சில் இருந்து பத்திரமாக மீட்டனர். அத்துடன் விபத்து நடந்த பகுதியில் மின் விநியோகத்தை நிறுத்தி சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தச்சநல்லூர் – தாழையூத்து இடையே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் குறுகலான இடமே உள்ளது. மேலும் இங்கு சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரம் சாலை சீரமைப்புக்காக நீண்ட நாட்களாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த குறைகளை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post நெல்லையில் அதிகாலை அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 5 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: