குக்கி தீவிரவாதிகள் முகாமுக்கு தீ வைப்பு

இம்பால்: மணிப்பூரில் குக்கி தீவிரவாதிகள் முகாமுக்கு கிராம மக்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர். 310 பேர் காயமடைந்தனர். அங்கு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பின் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே மோதல் வெடித்துள்ளது. நேற்று முன்தினம் காங்சிங் மாவட்டத்தில் உள்ள சீரோவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைத்தனர். மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ ரஞ்சித் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் தங்களது வீடுகளை இழந்தனர். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் சுக்னுவில் உள்ள தீவிரவாதிகளின் முகாமுக்கு தீ வைத்து கொளுத்தினார்கள்.

The post குக்கி தீவிரவாதிகள் முகாமுக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: