சென்னை: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மைய விரிவாக்கப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் சென்னை வர்த்தக மைய விரிவாக்கப்பணிகளை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் இன்று (05-06- 2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை வர்த்தக மையத்தில் (Chernal Trade Centre) 10,560 சதுரமீட்டர் பரப்பளவில் மூன்று பொருட்காட்சி அரங்கங்களும், 2000 நபர்கள் அமரக்கூடிய மாநாட்டு அரங்கமும் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.
எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு சென்னை வர்த்தக மையத்தின் விரிவாக்கத்திட்டதில் 83,745 சதுரமீட்டர் பரப்பளவில் ரூ.309 கோடி மதிப்பீட்டில் 4000 நபர்கள் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் மற்றும் ஐந்து பொருட்காட்சி அரங்கங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இங்கு 1308 கார்கள் நிறுத்தக்கூடிய வசதி கொண்ட, பன்னடுக்கு வாகன நிறுத்தமும் (Multi Level Car Parking) கட்டபட்டு வருகின்றது. இந்த கட்டுமானப்பணிகளை அமைச்சர் இன்று பார்வையிட்டார். இக்கட்டுமானப்பணிகளை நடைபெறுவதற்கு முன்னர் அறிவுறுத்தினார்.
உலக முதலீட்டாளர்கள் மாரநாடு முழுவதுமாக முடிக்கப்பட வேண்டும் என இவ்வாய்வின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., டிட்கோ மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப, தொழில் வழிகாட்டி மேலாண்மை இயக்குநர் / தலைமைச்செயல் அலுவலர் விஷ்ணு இ.ஆ.ப, செயல் இயக்குநர் டாக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி இ.ஆப, மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
The post தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நந்தம் பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மைய விரிவாக்கப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு! appeared first on Dinakaran.