வீடு புகுந்து 92 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: காவலாளிக்கு சரமாரி அடிஉதை

பெரம்பூர்: வீடு புகுந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காவலாளியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை கீழ்பாக்கம் பம்பிங் ஸ்டேஷன் லைன் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் பாலம்மா (92). இவரது பக்கத்து வீட்டில் மகள் மற்றும் உறவினர்கள் வசித்து வருகின்றனர். நேற்றிரவு பாலம்மா தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது எதிர்வீட்டில் வசித்துவரும் செந்தில் (45) என்பவர் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து கதவை பூட்டிவிட்டு பாலம்மாவை பலாத்காரம் செய்துள்ளார். அவரது கதறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்து கதவை திறக்க முயன்றபோது முடியவில்லை. கதவை உடைக்க முயன்றபோது உள்ளே இருந்து செந்தில் வெளியே ஓடிவந்தார். அப்போது அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுபற்றி அறிந்ததும் இரவு பணியில் இருந்த அயனாவரம் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் சென்று செந்திலை மீட்டு விசாரித்தனர். இதில் அவர் வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார் என்பதும் சித்ரா என்ற மனைவியும் 21 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்று தெரிந்தது. கணவரின் நடவடிக்கை பிடிக்காமல் சித்ரா தனது மகளுடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குடிபோதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து கற்பழிக்க முயற்சி செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து செந்திலிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

The post வீடு புகுந்து 92 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: காவலாளிக்கு சரமாரி அடிஉதை appeared first on Dinakaran.

Related Stories: