தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை குறைத்தது ஏன்?..ஒடிசா ரயில் விபத்தில் திசை திருப்பவே சிபிஐ விசாரணையா?: காங். தலைவர் கார்கே சரமாரி கேள்வி..!!

டெல்லி: தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை குறைத்தது ஏன்? ரயில் ஓட்டுநர்களின் காலிப்பணியிடங்களை மோடி அரசு நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்வி:

* ரயில்வேயில் 9 ஆண்டுகளாக 3 லட்சம் காலிப்பணி இடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்? என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

* 1990களில் 18 லட்சமாக இருந்த ரயில்வே ஊழியர்கள் எண்ணிக்கையை 12 லட்சமாக குறைத்தது ஏன்?

* பணியில் உள்ள ரயில்வே ஊழியர்களில் 3.18 லட்சம் பேரை ஒப்பந்த ஊழியராக வைத்திருப்பது ஏன் என்றும் காங். தலைவர் கார்கே, பிரதமர் மோடிக்கு கேள்வி

* குறிப்பிட்ட பணி நேரத்துக்கு அதிகமாக ரயில் ஓட்டுநர்களை பணிபுரிய கட்டாயப்படுத்துவது ஏன்?

* ரயில் ஓட்டுநர்களின் சுமையை அதிகரிப்பது விபத்துக்கு வழிவகுக்கும் என்பது தெரியாதா?

* ரயில் ஓட்டுநர்களின் காலிப்பணியிடங்களை மோடி அரசு நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்?

ரயில்வே பாதுகாப்பு ஆணைய பரிந்துரையை அலட்சியப்படுத்தியது ஏன்?: கார்கே கேள்வி

* மைசூர் அருகே கடந்த பிப்.8-ம் தேதி ரயில் விபத்து ஏற்பட்டது.

* விபத்தை அடுத்து தென்மேற்கு மண்டல ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் விடுத்த எச்சரிக்கையை ரயில்வே அலட்சியப்படுத்தியது ஏன்?

* தென்மேற்கு மண்டல ரயில்வே அதிகாரி சிக்னல் கட்டமைப்பில் கோளாறு உள்ளது பற்றி எச்சரித்த பிறகும் ரயில்வே செயலற்று இருந்தது ஏன்?

* ரயில்வே பாதுகாப்பு ஆணைய பரிந்துரைகளை அலட்சியப்படுத்தியதற்காக ரயில்வே துறையை நாடாளுமன்ற நிலைக்குழு கண்டித்துள்ளது.

* ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தை பலப்படுத்தாதது ஏன்?; ரயில்வே பாதுகாப்பு ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்காதது ஏன்?

* 2017-18-லிருந்து 2020-21 21 வரையான ஆண்டுகளில் நடந்த 10 விபத்துகளில் 7 விபத்துகள் தடம் புரண்ட நிகழ்வுகளாகும்.

* 2017-ல் இருந்து 2021 வரை கிழக்குக் கடலோர ரயில்வேயில் தண்டவாளப் பராமரிப்பு மேற்கொள்ளாதது ஏன்?

* இந்திய தலைமைக் கணக்கு அதிகாரி சுட்டிக்காட்டிய பிறகும் தண்டவாளப் பராமரிப்பு மேற்கொள்ளப்படாதது ஏன்?

தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை குறைத்தது ஏன்?: கார்கே கேள்வி

* தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை 79 சதவீதம் குறைத்தது ஏன்? என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

* தண்டவாளங்களை புதிதாக மாற்ற ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதே, அந்த நிதி ஒதுக்கப்படாதது ஏன்?

* காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரயில் மோதல் தடுப்பு திட்டத்தை மோடி அரசு செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டது ஏன்?

* காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ரக்ஷா கவாச் என்ற திட்டத்தை கவாச் என்று பெயர் மாற்றிய மோடி அரசு, 4% தடங்களில் மட்டுமே செயல்படுத்தி இருப்பது ஏன்? என்று சாடியுள்ளார்.

ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் சேர்த்தது ஏன்?: கார்கே கேள்வி

* 2017-18ம் ஆண்டிலிருந்து ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் சேர்த்தது ஏன்?

* தனியே தாக்கல் செய்யப்பட்டுவந்த ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் சேர்த்ததால் ரயில் திட்டங்களை செயல்படுத்துவது பாதிக்கப்பட்டது.

* ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டத்துடன்தான் தனி ரயில்வே பட்ஜெட் முறை கைவிடப்பட்டதா?

* அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு இடையே ரயில்களை இயக்குவதை தனியாரிடம் அரசு ஒப்படைத்தது ஏன்?

* பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டுவந்த சலுகைகளை ரத்து செய்தது ஏன்?

ஒடிசா ரயில் விபத்து-திசைதிருப்பவே சிபிஐ விசாரணையா?:

* ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவது பிரச்சனையை திசை திருப்புவதற்காகவா என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

* 2016-ல் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

* கான்பூர் ரயில் விபத்தில் சதி நடந்திருப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.

* 2 ஆண்டுகள் விசாரணை நடத்திய என்ஐஏ ரயில் விபத்து தொடர்பாக குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யாமல் வழக்கை கைவிட்டது.

* கான்பூர் ரயில் விபத்து தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தியது போலவே தற்போது சிபிஐ விசாரணை நடத்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடிக்கு 11 கேள்விகளை கேட்டு கார்கே கடிதம்:

* சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதன் மூலம் ரயில் பாதுகாப்பு விவகாரத்தை நிர்வாக ரீதியாக அணுக ஒன்றிய அரசு தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது.

* விபத்துக்கு காரணமானவர்களை தண்டிக்காமல் திசை திருப்பும் உத்தியை ஒன்றிய அரசு கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

* விபத்துக்கான மூல காரணம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சர் அறிவித்தபிறகு சிபிஐ விசாரணை நடத்துவது ஏன்?

* சிபிஐ அமைப்பு, குற்றங்களை விசாரிக்கவே இருப்பது, ரயில் விபத்துகளை விசாரிப்பதற்காக இருக்கும் அமைப்பு சிபிஐ அல்ல.

* சட்டம்-ஒழுங்கு தொடர்பான விசாரணை அமைப்புகள் தொழில்நுட்பம், நிர்வாகம், அரசியல் ரீதியான தோல்விகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க முடியாது.

* சிபிஐ-யில் ரயில்வே பாதுகாப்பு, சிக்னல் பராமரிப்பு சார்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் இல்லை.

* ரயில்வே நிர்வாகத்தில் பிரச்சனை உள்ளதை பிரதமரும் ரயில்வே அமைச்சரும் ஒப்புக்கொள்ள மறுப்பதாக கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

The post தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை குறைத்தது ஏன்?..ஒடிசா ரயில் விபத்தில் திசை திருப்பவே சிபிஐ விசாரணையா?: காங். தலைவர் கார்கே சரமாரி கேள்வி..!! appeared first on Dinakaran.

Related Stories: