ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து ஆன கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து மீண்டும் இயக்கம்..!!

சென்னை: ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்குவங்கத்திற்கு மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை கோர ரயில் விபத்து ஏற்பட்டது. கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் சுமார் 275க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்பகுதியில் சீரமைப்பு பணிகளானது தொடர்ந்து 2 நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று காலை சீரமைப்பு பணிகளில் ஒரு பாதி சரிசெய்யப்பட்டு ஒரு சரக்கு ரயிலும், ஒரு பயணிகள் ரயிலும் அப்பாதை வழியாக விடப்பட்டது. தற்போது சென்னையில் இருந்து அனுதினமும் காலை 7 மணிக்கு கிளம்பக்கூடிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 2 நாட்கள் கழித்து இன்று இயக்கப்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து – ஷாலிமார் (12842) இடையே மீண்டும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது. காலை 7 மணிக்கு பதிலாக 10.45 மணிக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.

ஒடிசா விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்கள் சீரமைப்பட்ட நிலையில் கோரமண்டல் ரயில் இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து கிளம்பியுள்ள கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 ரிசர்வ் பெட்டிகளும், 3 பொதுப்பெட்டிகளும் உள்ளன. இதில் 1274 நபர்கள் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். விபத்து நேரிட்ட பகுதியில் குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படும். ஒடிசாவின் பஹனகா பஜார் பகுதி வழியாக வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்று முதல் ரயில்கள் வழக்கம் போல் இருக்கும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து ஆன கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து மீண்டும் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: