திருத்துறைப்பூண்டியில் தொ.மு.ச கொடியேற்று விழா

திருத்துறைப்பூண்டி: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் திருத்துறைப்பூண்டி கிளை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மரக்கன்று நடும் விழா நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. கிளை தலைவர் அசோகன் தலைமை வகித்தார். திமுக நகரச் செயலாளர் ஆர். எஸ். பாண்டியன் கட்சி கொடி ஏற்றினார். கோட்டூர் திமுக ஒன்றிய செயலாளர் பால ஞானவேல் மரக்கன்று நட்டு சங்க கொடி ஏற்றி வைத்தார். எம்எல்ஏ மாரிமுத்து, ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் 200 பேருக்கு மஞ்சள் பையில் பரிசு வழங்கினர். இதில் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் சேது முருகானந்தம் தொ.மு.ச கிளை செயலாளர் அருணகிரி, பொருளாளர் பாஸ்கரன்,மத்திய சங்கம் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டியில் தொ.மு.ச கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Related Stories: