ரயில் விபத்தில் பலியானோருக்கு எம்எல்ஏ தலைமையில் அஞ்சலி

கும்பகோணம்: ஒடிசா ரயில் விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கும்பகோணம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களின் சார்பாக, அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் எம்எல்ஏ அலுவலக வாயிலில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கும்பகோணம் மாநகர திமுக செயலாளர் சு.ப.தமிழழகன், ஒன்றிய திமுக செயலாளர்கள் கணேசன், சுதாகர், தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்புக்குழு தலைவர் ஆர்.கே.பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் அசோக்குமார், இராஜேந்திரன், மாநகர அவைத் தலைவர் வாசுதேவன், துணை செயலாளர்கள் ப்ரியம் ஜெ.சசிதரன், சிவானந்தம், மாநகராட்சி மண்டல குழு தலைவர் மனோகரன், பகுதி கழக செயலாளர்கள் செல்வராஜ், கல்யாணசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், மாநகராட்சி பணி நியமன குழு தலைவர் அனந்தராமன், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் முருகன், திமுக நிர்வாகிகள் மணி, நேரு, முருகன், உதயம்.கோவிந்த், இராமச்சந்திரன், கேசவன், சிவக்குமார், ராஜேஸ்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post ரயில் விபத்தில் பலியானோருக்கு எம்எல்ஏ தலைமையில் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: