சிவகாசியில் வைகாசி திருவிழா குழந்தைகள் தூக்கிய வேலன் காவடி

சிவகாசி, ஜூன் 5: சிவகாசியில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஏராளமான குழந்தைகள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.சிவகாசியில் வைகாசி விசாக திருவிழா வெகு விமா்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சிவகாசி காத்தநாடார் தெரு, முத்தாலம்மன் கோயிலின் முன்பு தொடங்கி, திருத்தங்கல் சுப்பிரமணியசுவாமி கோயில் வரை சுமார் 100க்கும் மேற்பட்ட சிறுவா்கள் மற்றும் சிறுமிகள் காவடி சுமந்து ஊர்வலமாக சென்றனர். ஒவ்வொரு கோயிலில் வீற்றிருக்கும் தெய்வங்களை வணங்கி, பஜனை செய்து வழிபாடு செய்தனர்.

கந்தவேல் முருகா, கதிர்வேல் முருகா என்று கோஷங்கள் முழங்க குழந்தைகள் காவடி எடுத்து சென்றனர். பக்தர்கள் கூறும்போது, தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமாக காவடி எடுத்தல் திகழ்கின்றது. சிவகாசியில் கடந்த 10 ஆண்டுகளாக காவடி எடுத்து வழிபாடு செய்து வருகின்றோம். குழந்தைகளுக்கு கல்வி அறிவு காவடி எடுத்து சிவகாசியில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்து வருகின்றோம் என்று தெரிவித்தனர்.

The post சிவகாசியில் வைகாசி திருவிழா குழந்தைகள் தூக்கிய வேலன் காவடி appeared first on Dinakaran.

Related Stories: